கபாலீஸ்வரன் கபாலமும், பார்ப்பனர் சூழ்ச்சியும்

•செப்ரெம்பர் 23, 2007 • பின்னூட்டமொன்றை இடுங்கள்

சில நாட்களுக்கு முன் கபாலீஸ்வரர் கோயிலில் இடி விழுந்தது. என்னடா இது கபாலீஸ்வரரின் கபாலத்துக்கே சோதனை வந்து விட்டதே என்று நானும் கொஞ்சம் வருத்தப்பட்டேன். இருந்தாலும் எனக்குத் தெரியும் தன்னுடைய தலையைப் பாதுகாத்துக் கொள்ள கடவுளர்களால் முடிவதில்லை என்று.

இல்லையேல் இத்தனை சிலைத் திருட்டு நடக்குமா, சிலை உடைப்பு நடக்குமா, போலிச் சாமியார்களின் பாதங்களில் கடவுளர்கள் கிடக்க வேண்டிய சூழல் வருமா ?

கபாலீஸ்வரரின் தலையில் இடி விழுந்த சமாச்சாரத்தை அறிந்த பகுத்தறிவாளர்களுக்குத் தெரிந்திருக்கும் இடி, மின்னலுக்கு கபாலீஸ்வரரும் ஒன்று தான் காசி மேடு கபாலியும் ஒன்று தான் என்பது. ஆனால் பூசாரிகள் தான் கொஞ்சம் குழம்பிப் போனார்கள்.

ஊடகங்களும் இதை ஏதோ நிகழக்கூடாதது நிகழ்ந்து விட்டது போல கொட்டை எழுத்தில் போட்டு கட்டம் போட்டு பூஜை செய்தனர்.

இந்தக் களேபரங்களில் திகைத்துப் போனவர்கள் கடவுளை வைத்து பிரிவினையும் தொழிலும் செய்து வரும் பார்ப்பனர்கள் தான். இவர்கள் தான், ஐயோ நம்ம வருமானம் போச்சே, இந்த பாழாப்போன கபாலீஸ்வரர் இடி விழுந்தப்போ கொஞ்சம் ஒதுங்கி நின்னிருக்கக் கூடாதா கணக்காய் அங்கலாய்த்தனர்.

நம்ம பார்ப்பனக் கூட்டத்துக்கு தான் ஏழாவது அறிவு வேலை செய்யுமே. அதாங்க, அடுத்தவனை ஏமாற்றும் அறிவு. உடனே அறிக்கை வெளியிட்டார்கள். எப்படி தெரியுமா ?

லோகத்துக்கு வர இருந்த ஆபத்தை பகவான் தன்னோட தலையிலே வாங்கிங்டான். அதனாலே எல்லோரும் பூஜை கர்மம், புனஸ்காரம் ஏதேதோ பண்ணுங்கோ, பகவானுடைய கோபம் தீரட்டும் ன்னு அறிக்கை வெளியிட்டார்கள்.

வெளியிட்ட பார்ப்பனர்கள் மாமியார்களுடன் உட்கார்ந்து மாவடு சப்பிக் கொண்டிருக்கையில், இதை வாசித்த பக்த கோடிகளாகிய வெவரம் கெட்டவர்கள். ஐயோ பகவானுக்கு ஏதாச்சும் பண்ணுங்கோ, அவர் சாந்தியாகட்டும் கணக்கா பரிகாரங்களில் இறங்கிவிட்டார்கள்.

பார்ப்பனர்களுக்கு இப்போ ஒரு மாவடுவில் இரண்டு மாங்கா !

அதுக்கப்புறம் என்னடான்னா, குருவாயூர் கோயிலில் யானை மேலிருந்த கடவுள் கீழே விழுந்து எலும்பு முறிவாம். காரணம் என்னன்னா ? திடீர்ன்னு யானைக்கு மதம் புடிச்சிச்சாம். அடங்கொய்யா யானைமேல கடவுள் இருந்தாலும் யானையை கண்ட்ரோல் பண்ண முடியாதா ? கடவுள் கீழே விழுந்து இடுப்பு எலும்பு முறிஞ்சு போய் ரொம்ப அவஸ்தைப் படறாராம்.

இப்படி கடவுளே கஷ்டப்பட்டிட்டு இருக்காரேன்னு ரொம்ப கவலையா பேப்பர் படிச்சா, இரண்டு ஆட்டை பலியிட்டாங்களாம், டிரெயினோ, பிளேனோ நல்லா ஓடட்டும்ன்னோ என்னவோ.

அட பதர்களா ன்னு விவேக் பாணில சொல்லிட்டு சிரிக்கிறதைத் தவிர வேறேதும் எனக்கு தோணலீங்க.

Advertisements

மிரட்டல் பின்னூட்டமிடும் பயந்தாங்கொள்ளி பார்ப்பனர்கள்.

•ஜூலை 6, 2007 • 4 பின்னூட்டங்கள்

 

சமீப காலமான சில பார்ப்பனர்களிடமிருந்து எனக்கு மிரட்டல் பின்னூட்டங்கள் வந்து கொண்டே இருக்கின்றன. எனது வீட்டில் அடுத்தவன் எறியும் கழிவுகள் சேரவேண்டாம் என்பதனால் அதை நான் அப்புரூவ் செய்வதில்லை.

நேர்மை வலைப்பூவை நான் ஆரம்பித்தது சிவாஜி போன்ற திரைப்படங்களுக்கு ஆரத்தி எடுக்கவோ அல்லது அரசியல் சார்பாய் யாரையும் சொறிந்து விடுவதோ அல்ல.

பெரியாரின் கொள்கைகளை வணிகத்துக்காகப் பயன்படுத்தும் கீழ்த்தரமான பெரியார் பக்தனும் அல்ல. நரம்புகளிலும், சுவாசத்திலும் அவற்றை ஓட விட்டிருப்பவன்.

பார்ப்பனர்கள் செய்யும் பொய் பிரச்சாரங்களை ஆதாரத்துடன் பல முறை எனது வலைப்பூவில் நான் விளக்கியிருந்தேன். இப்போதும் செய்கிறேன். இனியும் செய்வேன்.

இடஒதுக்கீடானாலும், ராமர் பாலமானாலும் உண்மை நிலவரம் என்ன என்பதையே நான் சொல்லி வந்திருக்கிறேன். பார்ப்பனர்களின் பல பொய் புள்ளி விவரங்களை வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறேன்.

நான் பார்ப்பனர்களின் எதிரி அல்ல. பார்ப்பனீய சிந்தனைகளின் எதிரி. பெரியார் சிந்தனை கொண்டிருக்கும் பார்ப்பனீயன் இருந்தால் அவனை மதிப்பேன். பார்ப்பனீய சிந்தனையை பெரியார் பக்தன் கொண்டிருந்தாலும் அவனை வெறுப்பேன். இது தான் எனது நிலை.

இதெல்லாம் பிடிக்காமல் தான் நாயே, பேயே என்றெல்லாம் அழைத்து எனக்கு பல பின்னூட்டங்கள் வந்து கொண்டிருக்கின்றன. அவற்றை நான் நாகரீகம் கருதி வெளியிடவில்லை. ஆனால் அவற்றை அனுப்புவது யார் என்பதை எனது பல்லாண்டு கால கணிணி பரிச்சயம் மூலம் கண்டுபிடிப்பேன்.

இதன் மூலம் பல பொய் முகமூடிகளை கழற்றிப் பார்க்கும் ஆசை எனக்கு வந்திருக்கிறது.

பார்ப்பனீயர்களுக்கு ஒன்று மட்டும் சொல்லிக் கொள்ள ஆசைப்படுகிறேன். உங்கள் கட்டுக் கதைகளை நம்பி அழிந்து போன காலமெல்லாம் போய் விட்டது. இப்போது பார்ப்பனீய சிந்தனைகளை ஒரு நகைச்சுவை போல தான் சமுதாயமே பார்க்கிறது.

அந்த அசிங்கமான மனோபாவத்திலிருந்து வெளியே வாருங்கள். தொடர்ந்து நீங்கள் என்மீது சேறு வீசினால் உங்களிடம் இருப்பது வெறும் சேறு மட்டுமே என்று கருதிக் கொள்கிறேன்.

உங்களுக்கு நன்றி. நான் சரியான பாதையில் தான் செல்கிறேன் என்பதை உங்கள் பின்னூட்டங்கள் சொல்லித் தருகின்றன.

என் பணி தொடரும் என்பதை மட்டும் உங்களிடம் சொல்லிக் கொள்கிறேன்.

பார்ப்பனர் முகத்தில் மீண்டும் கரி. தமிழகம் சாதனை.

•ஜூன் 29, 2007 • 9 பின்னூட்டங்கள்

இந்த வருடத்திற்கான மருத்துவ சேர்க்கை பட்டியலில் முதல் ஏழு இடங்களையும் பார்ப்பனர் அல்லாதோர் பிடித்துள்ளனர். இது தமிழகத்தில் 80 வருடங்களாக உள்ள இட ஓதுக்கீடுக்கு கிடைத்த வெற்றி. இதை புரிந்தும் புரியாதது போல் நடித்து இட ஓதுக்கீடுனால் கல்வி தரம் குறையும் என பொய்யை பரப்பும் ஆதிக்க சாதினருக்கு ஒரு சாட்டை அடி தான் இந்த பட்டியல்.

1.பிரவீன் குமார்   
2.நித்தியானந்தன்
3.கார்த்திகேயன்
4.மீனா 
5.ஜெரீன் சேகர்  
6.தசின்நிலோபர் 
7.அசுவின் குமார்

மொத்தம் தேர்ச்சி பெற்றவர்களில்

பிற்படுத்தப்பட்டோர்  41.02
மிகப் பிற்படுத்தப்பட்டோர் 29.84

தாழ்த்தப்பட்டோர்  18.38
பழங்குடியினர் 1.11
ஆதிக்க சாதினர் 9.65

முதல் தலைமுறை இடஓதுக்கீட்டால் சிறிது முன்னேற்றம் அடைந்தது. தற்போது உள்ள தலைமுறை மேல் சாதியினருக்கு இணையாக, அவர்களை விட உயர்வான நிலையை அடைந்துள்ளனர். இது தமிழகத்தில் மட்டுமே உள்ளது இதை இந்தியா முழுவதும் நீடிக்க தேவை உயர் கல்வி நிலையங்களிலும் இட ஓதுக்கீடு.

சுஜாதாவின் உண்மை முகம் !

•மே 21, 2007 • 4 பின்னூட்டங்கள்

கேள்வி : ஆய்ந்து அறிந்து மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்லக்கூடியவர்கள் பெரும்பாலும் நாத்திகர்களாக இருந்திருக்கிறார்கள். நீங்கள் எப்படி?சுஜாதா : பெரும்பாலும் என்கிறீர்கள். நீங்கள் எத்தனை ஆழ்ந்து அறிந்தவர்களை படித்திருக்கிறீர்க்ள்? நான் படித்த ஆ.அறிந்தவர்கள் எல்லாம் கடவுளை நம்புகிறவர்கள். ஐன்ஸ்டீன் உட்பட,…Einstein has told that..

“I cannot accept any concept of God based on the fear of life or the fear of death or blind faith. I cannot prove to you that there is no personal God, but if I were to speak of him I would be a liar.”

“I have repeatedly said that in my opinion the idea of a personal God is a childlike one.You may call me an agnostic, but I do not share the crusading spirit of the professional atheist whose fervor is mostly due to a painful act of liberation from religious indoctrination received in youth.”

நேர்மை : சுஜாதா எவ்வளவு பெரிய பூசணிக்காயை மறைக்க முயல்கிறார். இன்னும் சில வருடங்களில் தந்தை பெரியாரை கூட கடவுள் நம்பிக்கை உள்ளவர் என்று கூறுவார்கள்.இவர் தொடர்ந்து பல பத்திரிக்கைகளில் ஐன்ஸ்டீன் குறித்து தவறான தகவலை பரப்புகிறார். “எத்தனை ஆழ்ந்து அறிந்தவர்களை படித்திருக்கிறீர்க்ள்?” என்று எல்லாம் தெரிந்தவர் போல ஒரு மாயையை உருவாக்குகிறார்.

கேள்வி 2 : தான் செய்யும் எல்லா தவறுகளுக்கும் பின்னாளில் இறைவனிடத்தில் தண்டனை உண்டு என்று உணர்ந்தாலும் கூட, மனிதன் தொடர்ந்து தவறுகள் செய்கிறானே ஏன்?சுஜாதா : இறைவன் மன்னிக்கும் குண்ம் உள்ளவன் . தண்டனையை ரத்து செய்துவிடுவான் என்ற நம்பிக்கையில்தான். ‘தெரியேன் பாலகனாய் பல தீமைகள் செய்துவிட்டேன். அரியே வந்தடைந்தேன். அடியேனை ஆட்கொண்டு அருளே’ என்று திருமங்கை ஆழ்வார் போல உருகி கேட்டால் மன்னித்து விடுவார் . நேர்மை :அதனால் தான் காஞ்சி காமகோடி சங்கராச்சாரியார் முதல் பிரேமானந்தா வரை எல்லோரும் தவறு செய்கிறார்கள் என்று சுஜாதா நினைக்கிறாரா ?.

கேள்வி 3 : சிலரை பாரம் சுமப்பவராக வைத்து, சிலரை வசதியாக வைத்திருக்கும் கடவுள், கணக்கில் வீக் அல்லது பாரபட்சம்காட்டுகிறார். இதில் எது சரியான விடை?சுஜாதா : சரியான விடை கடவுள் உங்களை இந்த கேள்வி கேட்கவைக்கிறார் என்பதே! ஏற்றத்தாழ்வே இல்லாத உலகத்தை நினத்துப்பாருங்கள். எல்லாருக்கும் எல்லாமும் எப்போதும் கிடத்துவிடும் என்றால் சரியாக அடுத்த திங்கட்கிழமைக்குள் போரடித்துவிடாதா?நேர்மை : இதில் தான் இவரின் பார்ப்பன மேட்டுக்குடித்தனம் தெரிகிறது. இவர்களுக்கு மக்களின் பிரச்சனைகள் ஒரு பொழுதுபோக்கு.

இப்படி ஒரு பதிலை பத்திரிக்கை ஆசிரியர் தணிக்கைக்கு உட்படுத்த மாட்டாரா? என்று ஒரு கேள்வியை திரு.கார்மேகராஜா கேட்டுயிருந்தார். அவரும் சுஜாதாவை ஒத்த கருத்து கொண்டவரானால்? எப்படி தணிக்கை செய்வார். மேலும் சுஜாதாவை எழுத அழைக்கும் போது அவர் என்ன எழுதுவார் என்று தெரியாமலா குங்குமம் அழைத்திருக்கும்?நன்றி : http://karmegarajas.blogspot.com/2007/05/blog-post.html

இட ஒதுக்கீடு: பார்ப்பனரின் சூழ்ச்சி !

•மே 18, 2007 • பின்னூட்டமொன்றை இடுங்கள்

இன்று உச்சநீதிமன்றத்தின் 2 நீதிபதிகள் இட ஒதுக்கீடு சட்டத்தை குறித்து 5 உறுப்பினர் அரசியல் சாசன பெஞ்ச் விசாரிக்கும் என்ற தீர்ப்பை வழங்கும் போதுஉத்தரவை பிறப்பிக்கும் முன்பு நீதிபதிகள் கூறுகையில், “இந்த ஆண்டு நிச்சயம் இட ஒதுக்கீடு சட்டத்தை அமல்படுத்த முடியாது. ஜாதி அடிப்படையிலான இந்த இட ஒதுக்கீடு சட்டத்தின் மூலம் குடிமக்களின் அடிப்படை உரிமைகள் பறிபோவதை அனுமதிக்க முடியாது. இந்த சட்டம் குறித்து அரசியல் சாசன பெஞ்ச் விசாரிக்கும்போது, 93வது அரசியல் சாசன திருத்தத்தை விரிவாக ஆராய வேண்டும் என்று கருத்து தெரிவித்தனர். ”

இன்று இப்படி கூறுபவர்கள் அதே உச்சநீதிமன்றத்தின் 9 உறுப்பினர் கொண்ட அரசியல் சாசன பெஞ்ச் 27% ஜாதி அடிப்படையிலான வேலை வாய்ப்புக்கான இடஒதுக்கிடை சரி என்று கூறியதை மேற்கோள் காட்டி இட ஒதுக்கீடு சரி என்று கூறாராதது ஏன்? வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்கிவிட்டு கல்வியில் இட ஒதுக்கீடு வழங்காமல் இருப்பது அந்த வேலை வாய்ப்பிற்கான தகுதி பெறுவதை தடுப்பதற்கு இந்த பார்ப்பன சமூகம் செய்யும் சூழ்ச்சி.

தருவது போல தந்துவிட்டு, அதைப் பெறக்கூடிய அத்தனை வழிகளையும் அடைக்கவேண்டுமென்று திட்டம் போட்டு செயல்படுகிறார்கள். இந்த நிலை என்று மாறும் ? என்று பார்ப்பன பாரதம், சுதந்திர இந்தியாவாகும் ?

RSS இடஒதுக்கீடு குறித்து குறிப்பிடுகையில்,  அரசு இதை சரிவர திட்டமிட்டு செயல்படுத்தவில்லை என்று குறை கூறுகிறது. உண்மையில் அவர்களுக்கு அக்கறை இருந்தால் அரசு எப்படி செயல்பட வேண்டும் என்று அறிவுரை வழங்கி இருக்கலாம், அல்லது ஒரு ஒரு திட்டத்தை முன்மொழிந்திருக்கலாம். இதை விடுத்து ஒரே கல்லில் இரண்டு மாங்காய் கணக்காக, இட ஒதுக்கீடு சரியாக செயல்படாத மகிழ்ச்சியையும், அதற்கு மத்திய அரசைக் குறை கூறும் வாய்ப்பையும் RSS மற்றும் அதன் அடி வருடிகளும் பெற்றிருக்கிறார்கள் என்பதே உண்மை.

இந்த பார்ப்பனீய அடக்குமுறையை பார்ப்பனர் அல்லாதோர் சிந்தித்து ஒன்று சேர்ந்து செயல்பட்டாலொழிய அழிக்க முடியாது. சிந்திப்பார்களா ? இல்லை பார்ப்பனர்களின் மாய வலை வீச்சில் அகப்பட்டு அழிவார்களா ?

பூமி பூசையும், மத ஒருமைப்பாடும் !!

•மே 15, 2007 • 3 பின்னூட்டங்கள்

“சென்னைக்கு இனி தங்கு தடையின்றி குடிநீர் கிடைக்கும் ! பூமி பூஜையுடன் துவங்கியது கால்வாய் சீரமைப்புப் பணி ” இந்த தலைப்பை தினமலர் நாளிதழில் இன்று பார்த்தபோது சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை.

பஜனை பாடல்கள் பாடி, ஹோமம் வளர்த்து, சாய்பாபா மந்திரங்கள் முழங்க கால்வாய் சீரமைப்புப் பணி துவங்கியது. இனிமேல் தயவு செய்து யாரும் இந்தியா மதச் சார்பற்ற நாடு என்று சொல்லாதீர்கள்.  மதச்சார்பற்ற நாடெனில் பூசைகள் ஏதும் இல்லாமலோ, அல்லது எல்லா மதத்தினரின் பூசைகளுடனுமே நடந்திருக்க வேண்டும் இந்த பணி ! நடக்கவில்லையே.

சாய்பாபா கையில் மறைத்து வைக்கும் லிங்கத்தையும், விபூதியையும் எடுப்பதில் கெட்டிக்காரன் என்பது உலகுக்கே தெரிந்த விஷயம்.  இந்த சீரமைப்புப் பணியையும் சித்து வேலையில் செய்திருந்தால் செத்த சௌகரியமா இருக்குமோன்னோ !!! சாய்பாபாவின் அடிவருடிகள் சிந்திப்பார்களா?

பார்ப்பனர்களின் தொடரும் புரட்டுகள்..

•மே 14, 2007 • 10 பின்னூட்டங்கள்

இதைப்போன்ற கீழ்த்தரமான செயல்களை பார்ப்பனர்களை தவிர யாராலும் செய்ய முடியாது. தங்களுக்கு வேண்டிய கருத்துகளை பரப்ப அவர்கள் கையாளும் முறை இதோ

1.ஏதாவது ஒரு பெயரில் ஒரு இணைய முகவரி ஒன்றை எற்படுத்தி அதில் தாங்கள் கூற நினைக்கும் கருத்து பற்றிய ஆய்வு கட்டுரை ஒன்றை(போலியான) வெளியிடுவது.

2.பின் அந்த போலி கட்டுரையை மேற்கோள் காட்டி பதிவுகளை போடுவது, ஊடகங்களில் செய்தியாக வெளியிடுவது, மின்னஞ்சல் மூலம் பலருக்கு அனுப்புவது

போன்ற செயல்களின் முலம் இல்லாத ஒன்றை இருப்பது போன்ற தோற்றத்தை உருவாக்குவதை கடைப்பிடித்து சிறிதும் சந்தேகிக்காத அப்பாவிகளை ஏமாற்றி இவர்கள் பிடிக்குள் கொண்டுவருவதை தங்கு தடை இன்றி நிறைவேற்றி வந்திருக்கிறார்கள்.

மேலே கூறியவாறு பார்ப்பனர்கள் கடைப்பிடித்ததிற்கு எடுத்துகாட்டு

அ)பார்பனர்கள் தாங்கள் தெய்வ மொழி என்றழைக்கும் சமஸ்கிருதம் என்னும் செத்து போன ஒரு மொழியை உயிர்ப்பிக்க அவர்கள் ஆடும்

பித்தலாட்டம் நம்மை மயக்கமடைய செய்யும். Rick Briggs என்னும் நாசாவின் ஆராய்ச்சியாளர் என்று இல்லாத ஒருவரை மேற்கோள் காட்டி ஊடகங்களில் சமஸ்கிருதம் தான் கண்ணினி துறைக்கு ஏற்ற மொழி என்னும் பொய்யை பரப்புகிறார்கள். உண்மையில் அப்படி ஒரு ஆராய்ச்சியாளரே நாசாவில் இல்லை !! பார்ப்பனர்கள் நிரூபிக்கத் தயாரா ? புரட்டு ஆரம்பமானது இங்கு தான்

http://www.gosai.com/science/sanskrit-nasa.html

ஆ)இந்த ஏமாற்று முறையை தான் ராமர் பாலத்திற்கான பொய் பிரச்சாரத்திலும் கடைப்பிடித்தனர்.

http://india.krishna.org/Articles/2002/10/002.html

இங்கு தான் இந்த நாசா பற்றிய புரட்டு ஆரம்பமானது. நாசா போன்ற புகழ் பெற்ற நிறுவனங்களை எந்த ஆதாரமும் இல்லாமல் இப்போது மேற்கோள் காட்டுப்பவர்கள் இணையம் இல்லாத காலத்தில் எப்படி புரட்டுகளை பரப்பிருப்பார்கள் என்று சற்றே சிந்தியுங்கள். ( நாசாவின் பாலத்தை ராமர் பாலம் என்று சொல்லித் திரியும் இந்தியப் பார்ப்பனர்களைப் பார்த்து உலகமே சிரிக்கிறது )

நாசா வலைத்தளத்தில் இல்லாத தகவல்களை போலியாக இவர்கள் நாசாவின் பெயருடன் கூட தளங்கள் அமைத்து இல்லாத அமெரிக்கனின் பெயரைப் போட்டு கருத்துக்களைப் பரப்புகிறார்கள்.

மேலும் இவர்கள் இது போல மோகஞ்சதாரோ ஹராப்பா குறித்து ராஜாராம் மற்றும் ஜா என்பவர்கள் எழுப்பிய குதிரை புரட்டு !!!!

இப்படி அடுக்கி கொண்டே போகலாம். இப்படிப்பட்ட ஆதாரங்களை வைத்துக் கொண்டு தான் பலர் ஆராய்ச்சி !!! வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள். பலநாள் திருடன் ஒரு நாள் பிடிபடுவான் !!! பார்ப்பனர்களின் பொய் புரட்டு மறுமலர்ச்சியடைந்த, அறிவு சார் மனிதர்கள் (பார்ப்பனர் அல்லாதோர் ) நிறைந்த இன்றைய சமூகத்தில் எடுபடாது.

உண்மையில் ராமாயணத்தில் வரும் இலங்கை இன்றைய இலங்கையே இல்லை என்பதையே பலர் நிரூபித்திருக்கிறார்கள். அதுபற்றிய விரிவான கட்டுரை ஒன்று நேற்றைய தமிழ் ஓசை நாளிதழிலில் வெளியாகியிருந்தது.