பார்ப்பானும், தமிழ் புத்தாண்டும், ஓரினச் சேர்க்கையும்.

•ஏப்ரல் 15, 2008 • 5 பின்னூட்டங்கள்

இந்த மூணுக்கும் என்ன தொடர்புன்னு யோசிக்கிறீங்களா ? விடை இருக்கு !

தமிழ்ப் புத்தாண்டு என்பது சித்திரையில் வருவது தான் தையில் அல்ல என ஆட்டம் போட்டுக் கொண்டிருக்கின்றன பார்ப்பனக் கூட்டம்.

இதன் காரணம் தமிழரின் அடையாளத்தை பார்ப்பனர் எடுத்துக் கொள்ள மறுப்பது மட்டுமல்ல, எல்லா சாதிக்காரனும் செய்வதை நானும் ஏன் செய்ய வேண்டும் எனும் உயர் சாதி மனப்பான்மையும் தான்.

அதற்கு ஏதேனும் கிழட்டுப் பஞ்சாங்கங்கள் ஐநூறு ஆண்டுகளுக்கு முன் எழுதிய பிதற்றல் கிறுக்கல்களை துணைக்கு அழைப்பார்கள். அதில் ஒன்று சித்திரை மாதத்தின் முதல் நாள் ப்ரம்ம்ம்ம்ம்மன் உலகைப் படைத்தான் என்பது.

இன்னொன்று கிருஷ்ணனும், நாரதனும் நன்றாக உடலுறவு (வாத்சாயனாரிடம் கேட்க வேண்டும். எந்த போஸ் ஆண் – ஆண் உறவுக்குச் சிறந்ததென்று )  கொண்டு (ஒருவருக்கொருவர் ) பிள்ளைகளைப் பெற்றார்களாம். (எது வழியா ? ) பெற்ற கணக்கு 60, அந்த அறுபதும் அறுபது வருடங்களாம். அக்ஷய, சொக்ஷய என்று என்னென்னவோ வரும்.

ஏன் நாரதன் கிருஷ்ணனை மேட்டர் பண்ணினான் என்னும் மேட்டர் தான் சூப்பர். நாரதர் கிருஷ்ணருடைய 60 பிகருங்க வீட்டுலயும் போய் எதையாவது ஒண்ணை செட் பண்ண பாத்தானாம். ஆனா அறுபது வீட்டுலயும் கிருஷ்ணனே மேட்டர் பண்ணிட்டு இருந்ததானாம். வேற வழியில்லாம கோபத்துல நாரதர் கிருஷ்ணனை உறவு கொண்டானாம்.

அதனால சித்திரை யில வருஷப் பிறப்பாம். நீங்க அப்படியே கொண்டாடுங்கப்பா… நாங்க தமிழர்கள் தையே போதும் எங்களுக்கு. ஓரினச் சேர்க்கை பிரியர்கள் சித்திரையில கொண்டு ஆடுங்க.

இதெல்லாம் இருக்கட்டும். 
ஏன் பார்ப்பனர்கள் தமிழ்ப் புத்தாண்டு தையில் வரக்கூடாது என நூல் பிடித்துக் கதறுகிறார்கள் ? யாரேனும் விளக்குவீர்களா எனக்கு ?

 

Advertisements

பா.ம.க vs வீரப்பன் !!

•ஏப்ரல் 11, 2008 • 4 பின்னூட்டங்கள்

இனமும் வனமும் சிதைந்த கதை என நீட்டி முழக்கிக் கொண்டிருக்கிறது மக்கள் தொலைக்காட்சி. நல்ல படப்பிடிப்பு, நடிகர் தேர்வு, உணர்ச்சி மயமான சம்பவங்கள் என சந்தனக் காடு பட்டையைக் கிளப்புகிறது.

இன்னொரு பக்கம் பா.ம.க வின் பத்திரிகைகளில் வீரப்பன் இன்னொரு தெய்வமாகவும்
மற்றவர்கள் மாபெரும் சாத்தான்களாகவும் சித்தரிக்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றனர்.

ஈவு இரக்கமற்ற கொடுங்கோலின் உச்சமாக அவர்களால் சித்தரிக்கப்பட்டிருப்பவர்கள் உண்மையில் அத்தனை கொடூரமாக இருந்திருப்பார்களா இல்லையா என்பது கடவுளுக்கே வெளிச்சம். எனினும் தவறிழைத்தவர் யாராய் இருந்தாலும் அதை நியாயப்படுத்துவது எனது நோக்கமல்ல.

கடந்த வாரம் எதேச்சையாக பத்திரிகைத் துறை நண்பர் ஒருவரிடம் பத்திரிகைத் துறையில் சாதீயம், அரசியல் நோக்கு, சுயநல வெளிப்பாடு என பல விஷயங்களைக் குறித்து பேசிக்கொண்டிருக்கையில் வீரப்பன் பற்றிய பேச்சு வந்தது.

அவர் மிக மிக சாதாரணமாகச் சொன்ன ஒரு செய்தி என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அவர் சொன்னது இது தான்.

“சும்மா இவர்கள் வீரப்பன் செய்திகளை போஸ்ட்மார்ட்டம் செய்து கொண்டிருக்கின்றனர். மக்கள் தொலைக்காட்சியோ, பாமக பத்திரிகைகளோ இதை புனிதப்படுத்துவதன் காரணம் சாதி அரசியல் தான். வீரப்பனும் பா.ம.க முன்னிறுத்தும் சாதியும் ஒன்றே. அது தான் அனைத்துக்கும் பின்னணியில் இயங்கும் ஒரே காரணம்” என்றார் அவர்.

மிகவும் அதிர்ச்சியாக இருந்தது செய்தியைக் கேட்க !

அன்னிய மொழியை எதிர்க்கும் கட்சியில் எப்போதும்
வன்னிய மொழியே வாழ்கிறதோ ?

உடையை மெல்லக் கழற்றி…

•மார்ச் 24, 2008 • 1 பின்னூட்டம்

par.jpg

நண்பனின் வீட்டிற்குச் சென்றிருந்தேன். பேசிக்கொண்டிருக்கும் போது கேட் தட்டப்படும் சத்தம். சன்னல்  வழியே எட்டிப் பார்த்தான் அவன். உடனே உள்ளே ஓடிப் போய் ஒரு சட்டையைப் போட்டுக் கொண்டு வந்தான்.

“என்னடா விஷயம், திடீர்ன்னு போய் சட்டை மாட்டிட்டு வரே ?” என்று கேட்டேன்.

“இல்லடா… மரியாதைக்குரிய ஒருத்தரு வந்திருக்காரு. அதான் சட்டையைப் போட்டுட்டு வரேன்” அவன் சொன்னபோது வாய் விட்டுச் சிரித்தேன்.

அவன் புரியாமல் பார்த்தான். ஒரு பெரியவர் உள்ளே வந்தார். சற்று நேரம் பேசிக்கொண்டிருந்து விட்டு சென்று விட்டார்.

“ஏண்டா லூசு மாதிரி அப்படி சிரிச்சே?’ என்று கேட்டான்.

“இல்லே அன்னிக்கு ஒரு “பெரியவாளை”ப் பார்க்க போனப்போ சட்டையைக் கழற்றி இரண்டு கையிலும் பிடித்து மார்போடு சேர்த்து வைத்து பவ்யமாய் போனியே அதை நினைத்தேன்.

அதெப்படிடா சில பெரியவாளைப் பார்க்க சட்டையைக் கழட்டறே, கேட்டா மரியாதைன்னு சொல்றே.

சில பெரியவங்களைப் பார்த்தா சட்டையைப் போட்டுக்கறே அதுவும் மரியாதைன்னு சொல்றே புரியலையே – என்றேன்.

ஆரம்பிச்சுட்டியா மறுபடியும் – என்றான் சலிப்புடன் அவன்.

சட்டையைக் கழட்டறது எந்த மரியாதை நிமித்தமும் இல்லேடா மவனே, உனக்கு பூணூல் இருக்கா இல்லையான்னு தெரிஞ்சுக்கத் தான். அதனால தான் ஆம்பளைங்க மட்டும் சட்டையைக் கழட்டுங்கோ ன்னு சொல்றான். மாமிங்களை பார்த்தாலே தெரியுமே அவங்க மடிசார் மகிமை. என்று வழக்கமாய் சொல்லும் பதிலையே சொன்னேன்.

இதைவிடக் கொடுமை தீட்சிதர்களை அரெஸ்ட் பண்ண போன போலீஸ்காரர்களும் சட்டையைக் கழற்றி விட்டுத்தான் உள்ளே போனார்களாம்.

அட போலீஸ் நண்பர்களே , அப்போ கோயிலுக்குள்ள ஒரு கொலை நடந்திட்டு இருந்தாலோ, ஒரு பாலியல் பலாத்காரம் நடந்திட்டி இருந்தாலோ, ஒருத்தன் தலைல கோபுரம் இடிஞ்சு விழுந்தாலோ பொறுமையா வெளியே நின்னு சட்டையைக் கழற்றுவீங்களா ?

காவலரோட கடமை எது ? பெரியவா வெச்ச சட்டத்தைக் காப்பாத்தறதா ? இல்லை அரசு வைத்திருக்கும் சட்டத்தைக் காப்பாற்றுவதா ?

பார்ப்பனரின் படுக்கையறையா ? இறைவனின் பள்ளியறையா ?

•மார்ச் 5, 2008 • 5 பின்னூட்டங்கள்

chi.jpg

சிதம்பரம் கோயிலில் எதைப்பாடினால் என்ன கிடைக்கும் என்பதெல்லாம் எனக்குத் தெரியாது ஆனால் தமிழில் பாடினால் அவமரியாதை கிடைக்கும் என்பதை தீட்சிதர்களின் செயல் அவமானத்துடன் விளக்கியது.

இது எப்படி இருக்கிறதென்றால், சொந்த வீட்டுக்குச் செல்ல வேண்டுமெனில் வழிப்போக்கனின் காலைப் பிடித்துக் கெஞ்ச வேண்டியது போலிருக்கிறது.

தமிழ் இலக்கியங்கள் கூறும் அந்தணர்களும், இந்த தீட்டு சிதர்களும் (தீட்சிதர்) ஒன்றல்ல என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.

தமிழன் கட்டிய கோயிலில் தமிழன் நுழையவும், தமிழில் பாடவும் தடை என்றால் இந்த கொடுமையை எங்கே போய் சொல்வது ?

இடத்தைக் கொடுத்தால் மடத்தைப் பிடிக்கும் இந்த தீட்டு சிதர்களை ஒட்டு மொத்தமாக கோயிலை விட்டே விரட்ட வேண்டும்.

வரலாற்றுச் சான்றுகளே இந்த கோயிலில் தமிழில் பாடல்கள் பாடப்பட்டன என்பதை உறுதி செய்கின்றன. இதை விட என்ன வேண்டும் ?

கோயிலில் நீ வராதே, அப்படி செய்யாதே, இப்படி பாடாதே என்றெல்லாம் சொல்ல யாருக்கும் அதிகாரம் இருக்கக் கூடாது. அப்படி இருந்தால் அது பார்ப்பனரின் படுக்கையறை, இறைவனின் பள்ளியறை அல்ல !

சுஜாதாவை என்னவென்பது ?

•பிப்ரவரி 28, 2008 • 2 பின்னூட்டங்கள்

sujatha.jpg

கொள்கை ரீதியாகவும், தர்க்க ரீதியாகவும், பார்வை ரீதியாகவும் எழுத்தாளர் சுஜாதா அவர்களுடன் எனக்கு சில கருத்து வேற்றுமைகள் இருந்தாலும், அவருடைய மறைவு மனதை கனக்கச் செய்தது.

இலக்கியம், திரையுலகம், அறிவியல் என அவருடைய பங்களிப்புகள் ஒதுக்கப்பட முடியாத இடத்தில் இருக்கின்றன.

அவரது இழப்பால் வருந்தும் இலக்கிய உலகோடு என்னையும் இணைத்துக் கொள்கிறேன்.

பார்ப்பனர் பிடியில் ஐ.டி

•பிப்ரவரி 13, 2008 • 10 பின்னூட்டங்கள்

ஐயர்கள் மற்றும் ஐயங்கார்களின் டிபார்ட் மெண்டைத் தான் ஐ.டி என்று சுருக்கி வைத்திருக்கிறாங்களோ என்று தோன்றுகிறது இந்த ஐடி ஐயாக்களின் கதையைக் கேட்டால்.

நான் பணிபுரிந்த அலுவலகத்தில் ஒரு பஞ்ச கட்சம் பண்ணிய அட்டகாசம் சொல்லி மாளாது.

இண்டர்வியூ நடக்கும்போதெல்லாம் பஞ்சகச்சம் கட்டிக் கொண்டு தான் வருவார். இண்டர்வியூவுக்கு வரும் மக்களுக்குத் தெரியவேண்டுமாம் அவரு “அவாள்” குடும்பத்தைச் சேர்ந்தவர் என்றும் அவாள்களை நிறைய ஆதரிப்பவர் என்றும்.

பயோடேட்டாக்களையெல்லாம் அவருடைய ஆள் ஒருவரிடம் கொடுத்து “இதுல நம்ம ஆத்து பசங்களையெல்லாம் தனியா எடு” என்று சொல்வார். அந்த லிஸ்ட் ல் இருக்கும் எல்லா பழங்களும் வேலையில் சேர்ந்து விடும்.

அதுவும் அவாள்களுக்கு இண்டர்வியூ நடத்துவதற்கென்றே அவாள் படை ஒன்றையும் தயாரித்து வைத்திருந்தார்.

நெற்றியில் பெரிய  U –  டர்ன் போட்டு வரும் அவர், போடாத அவருடைய ஆட்களை கோபக் கண்கொண்டு சுட்டு எரிப்பார்.

புதிதாக யாராவது வேலைக்குச் சேர்ந்தால், என்னப்பா நல்லா இருக்கியா ? என்று தோளை நசுக்குவார். நூல் கையில் தென்பட்டால் குலம் கோத்திரம் விசாரிப்பார் தனியாக. இல்லையேல் கண்டுகொள்ளாமல் போய் விடுவார்.
பிரமோஷன், பிற மோஷன் எல்லாம் அவருடைய ஆட்களுக்கு மட்டும் தான். கொஞ்சம் நெருங்கி வரும் இனத்துக்கு அடுத்த வரிசை மரியாதை.

அந்த கொடுமையைத் தாங்க முடியாமல் தான் போன மாதம் வேலை மாற்றலாகி இங்கே வந்தேன்.

இப்படித் தான் எல்லா அலுவலகங்களிலும் நடக்கின்றன என்பதை இந்த புதிய அலுவலகத்துக்கு வந்த இரண்டாவது வாரத்திலேயே தெரிந்து கொண்டு விட்டேன்.

உங்க அனுபவம் எப்படி ? இதுக்கு முடிவு தான் என்ன ?

உஷாரா இல்லேன்னா, அவாள்கள் எல்லாமா சேர்ந்து மத்தவாள் எல்லாருக்கும் நாமம் போட்டுடுவா.

உஷாரா இருங்கோன்னா.

ராமன் : உண்மையை உரக்கச் சொல்

•ஒக்ரோபர் 5, 2007 • 6 பின்னூட்டங்கள்

நாட்டில் எங்கு பார்த்தாலும் பார்ப்பனீய ஆதிக்கப் போராட்டங்கள் தூண்டி விடப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. அரசியல் ஆதாயத்துக்காக என்ன செய்வதென்று தெரியாமல் விழிக்கும் பாஜக விற்கு எப்போதும் “கடவுள்” போல வந்து காப்பாற்றும் கடமை ராமனுக்கு ஏற்பட்டிருக்கிறது. ( கவனிக்கவும் இது மூலிகை ராமன் அல்ல )

கட்டியது தவறு என்று அயோத்தியில் கோஷமிட்டு இடித்ததன் மூலம் ஆட்சியைக் கைப்பற்றி பின் ராமனை மறந்த பாஜகவிற்கு இப்போது இன்னோது ராமேஸ்வரத்தில் மூழ்கிக் கிடக்கும் ராமன் முத்தள்ளிக் கொட்டுகிறான். இடிப்பது தவறு என்னும் கோஷம் மத விஷமாக மனங்களில் நடப்பட்டுக் கொண்டே இருக்கின்றன.

பார்ப்பனீயர்களின் சூழ்ச்சியைப் புரிந்து கொள்ளாத மக்களும் ராமனுக்கு வக்காலத்து வாங்குவதாக நினைத்துக் கொண்டு பாசிசக் கொள்கைக்கு பாய் விரிப்பது தான் பரிதாபம்.

தமிழகத்துக்கு எந்த நலனும் கிடைக்கக் கூடாது என்று காலம் காலமாய் நினைத்து செயலாற்றி வருகின்ற வடநாட்டவரின் எண்ணத்துக்குத் துணையாக தமிழனே வேட்டி உருவி நிற்பதை அவமானம் என்று சொல்லாமல் வேறென்ன என்று சொல்வது ?

சீதையை மீட்டபின் ராமன் சீதையிடம் கேட்கும் கேள்விகளைப் பார்த்தால் எந்த பெண்ணும் ராமனை வெறுக்க வேண்டும். ஆனால் நடப்பதோ ராமனைப் போல ஒரு புருஷன் வேண்டுமென்று வேண்டுதல்கள் ! திருமணம் செய்து கொண்டபின் புருஷன் சந்தேகப் படுகிறான், திட்டுகிறான், கோழையாய் இருக்கிறான், எரிக்கிறான், ஜாதி வெறியில் அலைகிறான் என்றெல்லாம் சொன்னால் இதெல்லாம் தானே ராமனின் குணாதிசயங்கள். அதைத்தானே நீ கேட்டாய் பெண்ணே என்று விளக்கம் சொல்ல பகுத்தறிவுப் பாசறையில் வந்த சிலரைத் தவிர யாரும் இல்லை இங்கே.

மாத்ரி சேவா டிரஸ்ட் மூலம் மோசடி செய்து பிழைப்பை ஓட்டும் வேதாந்தியை எதிர்த்துக் குரல் கொடுக்கக் கூட தயக்கம் இங்கே ! முன்னாள் வருமான வரித்துறை ஆணையர் விஷ்வ பந்து குப்தா ” ராமஜன்ம பூமி டிரஸ்ட், விஷ்வ இந்து பரிஷத் இரண்டுமே போலியான பத்து டிரஸ்ட்கள் மூலம் ஆண்டுக்கு பதினையாயிரம் கோடி ரூபாய் வசூலித்து மதவெறி பரப்பி மாஃபியாக்கள் போல செயல்படுகின்றனர்” என்று சொல்லியிருப்பது கவனிக்கத் தக்கது.

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அத்வானியோடு சேர்ந்து குற்றம் சாட்டப்பட்ட பதினொன்று நபர்களில் ஒருவரான வேதாந்தியைத் தெரியாது என்று பாசக சொல்லியிருப்பது வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் முயற்சி என்பதைத் தவிர வேறு ஏதும் நினைப்பதற்கில்லை.

அயோத்தியில் கிமு 700 ஆம் ஆண்டிலிருந்து மனிதர்கள் வாழ்ந்த தடம் இருப்பதை ராமன் வாழ்ந்த அடையாளங்களாகச் சித்தரித்து இடித்தவர்கள் சொன்ன நியாயம், 17.5 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பே உண்டான ராமேஸ்வரம் மணல் திட்டை ராமன் போட்ட முட்டை என்று சொல்வது பகுத்தறிவாளர்களை மீண்டும் ஒரு முறை சிரிக்க வைக்கிறது.

ஐந்து நாளில் எண்ணூறு மைல் தூரத்துக்கு ராமன் பாலம் போட்டதாக “வால்”மீகி சொன்னார். அடே மடையா.. இலங்கைக்கு இருக்கும் தூரமே முப்பது மைல் தானேடா ? அப்போ எதுக்கு ராமன் எண்ணூறு மைல் தூரத்துக்கு பாலம் போட்டான் என்று யாரும் கேள்வி கேட்கவில்லை. அட.. அப்படியா சங்கதி என்று மீண்டும் ஒருமுறை நமக்கெல்லாம் சிரிக்க வாய்ப்பு வழங்கியதைத் தவிர வேறேதும் நிகழவில்லை இதில்.

ராமன் போட்ட கல் மிதந்ததாம். இப்போ மூழ்கிக் கிடக்கும் கல் ராமன் போட்டதுன்னு எப்படிப்பா சொல்றீங்க ? அப்போ ராமனோட பவர் போயிடுச்சான்னு கேக்காதீங்க. ஒருவேளை கேட்டா அந்த பாலத்தை ராமனே உடச்சுட்டான்னு சொல்லுவாங்க. ராமனே உடச்ச பாலத்தை நாம உடைக்கக் கூடாதான்னு மறுபடியும் கேட்டு பார்ப்பனர்களை டென்ஷன் ஏத்தாதீங்க.

மத உணர்வுகளை புண்படுத்தி விட்டதாகக் கூறி கருணாதியைக் கொல்லச் சொல்கிறார் காவிக் கசடு. அப்போ பாபர் மசூதி இடிப்புக்காக மத உணர்வுகள் புண்படவில்லையா ? அப்போதும் இவர்கள் இதே பரிசை அறிவித்திருக்க வேண்டியது தானே ? அத்வானிக்கு எதிராகவோ, அல்லது அவரது அடி வருடிகளுக்கு எதிராகவோ ? ஏன் செய்யவில்லை ?

ராமேஸ்வரத்திற்கும் இலங்கைக்கும் தலைமன்னாருக்கும் இடையே உள்ள ஆடம்ஸ் பிரிட்ஜ் பகுதியில் கப்பல் போக்குவரத்துக்குத் தடையாக உள்ள மணல் மேடுகள், பாறைகள் அகற்றி

ஆழப்படுத்தி கால்வாய் அமைப்பது சேது சமுத்திரத் திட்டத்தின் தலையாய நோக்கம். என்று தெள்ளத் தெளிவாக தேர்தல் அறிக்கை பக்கம் எண்பத்து மூன்று, எண்பத்து நான்கில் குறிப்பிட்டு விட்டு ஜெ வும் கைத்தடிகளும் பார்ப்பனீயர்களின் மாவடு பக்கம் மடி சாய்த்திருப்பது சிரித்துச் சிரித்து மாளாது !

“ராமன் தெய்வமாக வழிபட தகுதி இல்லாதவன். அவன் சீதாவை மட்டும் சந்தேகப் படவில்லை. இலட்சுமணன், பரதன், அனுமன் என எல்லோரையும் சந்தேகப் படுமளவுக்கு சராசரி மனிதன்” இதைச் சொன்னது கலைஞர் அல்ல. ரைட் ஹானரபிள் வி.எஸ் சீனிவாச சாஸ்திரிகள் !!!

தீக்குளித்த சீதையை காட்டுக்குத் துரத்திய மனித நேயமற்றவன், தன் மகன்களையும் காட்டுக்குத் துரத்திய பொறுப்பற்ற தந்தை ராமன். இவன் பொண்ணு கட்டியதே தப்பு, அப்புறம் பாலம் கட்டினா என்ன வெட்டினா என்ன. சீதையை காப்பாற்றவா பாலம் போட்டான் ராமன் ? இல்லையப்பா தென்நாட்டை அழிக்க. இலங்கையை எரிக்க.

தடாகை மகனை இலட்சுமணன் கொல்ல, ராமன் சொல்கிறான் “சூத்திரனைத் தானே கொன்றாய். அதனால் பாவமில்லை” !!. தவம் செய்யும் சம்புகன் ஒரு சூத்திரன் என்பதற்காய் அவனை கண்ட துண்டமாய் வெட்டி விடுகிறான். சூத்திரனுக்கு தவம் செய்யும் உரிமை இல்லையாம்.

உண்மையைச் சொல்வதெனில் கலைஞர் யாரையும் புண்படுத்தவில்லை. வால் மீகியும், ராமனும் சேர்ந்து தான் புண்படுத்தியிருக்கின்றனர்.

பெரியார் ராமன் ஒரு பேடி என்கிறார். அதற்கு அவர் சொல்லும் காரணம், ராமன் வாலியை மறைந்திருந்து கொன்றான், தாடகையை மறைந்திருதே கொன்றான், ராவணனையும் நேருக்கு நேராய் நின்று கொல்லவில்லை. அட.. ஆமா என்று நினைக்கத் தோன்றுகிறது அல்லவா.

இராமாயணம் ஆரியர்களை உயர்வாகவும், திராவிடர்களை அரக்கர்களாகவும் பாவிக்கும் ஒரு காவியம். ஆரியர்களின் அடக்குமுறைக்கு திராவிடர்கள் பலியான துயர கதை என்பதை பல்வேறு அறிஞர்கள், ஆராய்ச்சியாளர்கள் விளக்கிக் கூறியிருக்கின்றனர். இது ஒன்றும் புதிதல்ல.