முஸ்லீம்கள் தான் சூப்பர் !!! சொல்கிறார் வேத கோபாலன் !

உலகளாவிய ஒற்றுமையை வளர்க்கப் போகிறேன் என ஐ.பி.எல் போட்டி வந்தாலும் வந்தது இதுவரைக்கும் ஒற்றுமையா இருந்த இந்திய அணி வீரர்கள் முறைத்துக் கொள்ள ஆரம்பித்து விட்டனர். ஸ்ரீசாந்தும், பதானும் பரம எதிரிகள் போல முறைத்துக் கொண்டதைப் பார்க்க நேர்ந்தது.

ஆ..வூ என்றால் உடனே ஆரூடம், சோசியம், கணிப்புகளை வெளியிடும் ஜாதகப் புலிகள் (புலிகளுக்கு ஐந்தறிவு தானே ?) ஐ.பி.எல் பற்றியும் கணிப்பு தூஸ்ராக்களை வீசியிருக்கிறார்கள்.

அதுல தென்னிந்திய அணிகளில் ஒன்று தான் கோப்பையை வெல்லும். சேவாக் நல்லா விளையாடுவார், தோனி நல்லா அணியை வழிநடத்துவார், என்றெல்லாம் ஏகப்பட்ட கணிப்புகள். இதை விட பெரிய கணிப்பு என்னண்ணா இரண்டு மூணு பிளேயர்ஸ் க்கு காயம் ஏற்படுமாம் ! அடேங்கப்பா…

இப்படியே சொல்லிட்டு போனா நாமளும் சொல்ல ஆரம்பிச்சுடுவோம் இல்லையா ? முரளீதரன் பந்தை வீசினா சுத்தும், கில் கிரிஸ்ட் பாலை அடித்தா பால் தூரமா போகும் என்றெல்லாம். அதனால் அவர்கள் சில எண் விளையாட்டுகளையும் வீசியிருக்கிறார்கள்.

அதாவது 20வது ஆட்டத்துக்குப் பின் அணியின் புள்ளிகளில் மாற்றம் வருமாம் (இதைச் சொல்ல இவரு தேவையாக்கும்). வெளிநாட்டு அணிவீரர்களில் பிறந்தநாள் எட்டு என்று இருந்தால் இரண்டாவது பாதி விளையாட்டுகளில் ஜொலிப்பார்களாம் ( ஹா..ஹா.. இந்தியாவில எட்டு ராசியில்லை )

6, 24. 30 ஆகிய நாட்களில் விளையாடும் ஆட்டங்களில் பெரிய ஆச்சரியமான டிவிஸ்ட் இருக்குமாம். (ஒருவேளை ஓவருக்கு எட்டு பால் போடுவாங்களோ ? இல்ல அம்பயர்களும் பவுலிங் போடுவாங்களோ )

சென்னை அணிக்கு கோப்பை கிடைக்க வாய்ப்பு அதிகமாம். சென்னை – கல்கத்தா அணிகள் இறுதிப்போட்டி யில் ஆடுமாம். அதுல கொல்கொத்தா அணி தோக்குமாம், ஷாரூக் ஷாக்ரூக் ஆவாராம். .

இதெல்லாம் விட இந்த அணிகளில் இருக்கும் முஸ்லீம் வீரர்கள் தான் நல்லா விளையாடுவார்களாம். இப்படியெல்லாம் கணிப்பு சாணிகளை அள்ளி வறட்டி தட்டியிருப்பவர் பிரபலமான வேத கோபாலன் !

இந்த ராம கோபாலன், வேத கோபாலன் கள் தொல்லை தாங்க முடியவில்லை. கவுண்ட மணி பாணியில் சொன்னால், இந்த கொசுத் தொல்ல தாங்க முடியலை.

ஐயா வேத கோபாலன், இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே மக்களோட மனசை ரண களமாக்கிட்டீங்க. இனியாச்சும் இப்படி காமெடி கீமெடி பண்ணாம இருங்கோ.

படத்துக்கான விளக்கம் : இந்த மேட்டரைக் கேள்விப்பட்டா கூட இவரு சிரிக்க மாட்டாரா ?

Advertisements

~ by nermai மேல் ஏப்ரல் 21, 2008.

2 பதில்கள் to “முஸ்லீம்கள் தான் சூப்பர் !!! சொல்கிறார் வேத கோபாலன் !”

  1. கிளைமாக்ஸ் சூப்பருங்க

  2. […] ஐ.பி.எல் ஆரம்பிச்ச காலத்துல சென்னை கொல்கத்தா அணிகள் இரண்டும் பிச்சு உதற ஆரம்பிச்சுது. அவசரமா தன்னோட அண்டர்வியரை அவிழ்த்து சோசியம் சொல்ல …. […]

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: