உடையை மெல்லக் கழற்றி…

par.jpg

நண்பனின் வீட்டிற்குச் சென்றிருந்தேன். பேசிக்கொண்டிருக்கும் போது கேட் தட்டப்படும் சத்தம். சன்னல்  வழியே எட்டிப் பார்த்தான் அவன். உடனே உள்ளே ஓடிப் போய் ஒரு சட்டையைப் போட்டுக் கொண்டு வந்தான்.

“என்னடா விஷயம், திடீர்ன்னு போய் சட்டை மாட்டிட்டு வரே ?” என்று கேட்டேன்.

“இல்லடா… மரியாதைக்குரிய ஒருத்தரு வந்திருக்காரு. அதான் சட்டையைப் போட்டுட்டு வரேன்” அவன் சொன்னபோது வாய் விட்டுச் சிரித்தேன்.

அவன் புரியாமல் பார்த்தான். ஒரு பெரியவர் உள்ளே வந்தார். சற்று நேரம் பேசிக்கொண்டிருந்து விட்டு சென்று விட்டார்.

“ஏண்டா லூசு மாதிரி அப்படி சிரிச்சே?’ என்று கேட்டான்.

“இல்லே அன்னிக்கு ஒரு “பெரியவாளை”ப் பார்க்க போனப்போ சட்டையைக் கழற்றி இரண்டு கையிலும் பிடித்து மார்போடு சேர்த்து வைத்து பவ்யமாய் போனியே அதை நினைத்தேன்.

அதெப்படிடா சில பெரியவாளைப் பார்க்க சட்டையைக் கழட்டறே, கேட்டா மரியாதைன்னு சொல்றே.

சில பெரியவங்களைப் பார்த்தா சட்டையைப் போட்டுக்கறே அதுவும் மரியாதைன்னு சொல்றே புரியலையே – என்றேன்.

ஆரம்பிச்சுட்டியா மறுபடியும் – என்றான் சலிப்புடன் அவன்.

சட்டையைக் கழட்டறது எந்த மரியாதை நிமித்தமும் இல்லேடா மவனே, உனக்கு பூணூல் இருக்கா இல்லையான்னு தெரிஞ்சுக்கத் தான். அதனால தான் ஆம்பளைங்க மட்டும் சட்டையைக் கழட்டுங்கோ ன்னு சொல்றான். மாமிங்களை பார்த்தாலே தெரியுமே அவங்க மடிசார் மகிமை. என்று வழக்கமாய் சொல்லும் பதிலையே சொன்னேன்.

இதைவிடக் கொடுமை தீட்சிதர்களை அரெஸ்ட் பண்ண போன போலீஸ்காரர்களும் சட்டையைக் கழற்றி விட்டுத்தான் உள்ளே போனார்களாம்.

அட போலீஸ் நண்பர்களே , அப்போ கோயிலுக்குள்ள ஒரு கொலை நடந்திட்டு இருந்தாலோ, ஒரு பாலியல் பலாத்காரம் நடந்திட்டி இருந்தாலோ, ஒருத்தன் தலைல கோபுரம் இடிஞ்சு விழுந்தாலோ பொறுமையா வெளியே நின்னு சட்டையைக் கழற்றுவீங்களா ?

காவலரோட கடமை எது ? பெரியவா வெச்ச சட்டத்தைக் காப்பாத்தறதா ? இல்லை அரசு வைத்திருக்கும் சட்டத்தைக் காப்பாற்றுவதா ?

Advertisements

~ by nermai மேல் மார்ச் 24, 2008.

ஒரு பதில் to “உடையை மெல்லக் கழற்றி…”

  1. சாதிய உணர்வின் அடையாளமாய் இது போன்றதொரு படைப்புகளா கேவலம்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: