ராமன் : உண்மையை உரக்கச் சொல்

நாட்டில் எங்கு பார்த்தாலும் பார்ப்பனீய ஆதிக்கப் போராட்டங்கள் தூண்டி விடப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. அரசியல் ஆதாயத்துக்காக என்ன செய்வதென்று தெரியாமல் விழிக்கும் பாஜக விற்கு எப்போதும் “கடவுள்” போல வந்து காப்பாற்றும் கடமை ராமனுக்கு ஏற்பட்டிருக்கிறது. ( கவனிக்கவும் இது மூலிகை ராமன் அல்ல )

கட்டியது தவறு என்று அயோத்தியில் கோஷமிட்டு இடித்ததன் மூலம் ஆட்சியைக் கைப்பற்றி பின் ராமனை மறந்த பாஜகவிற்கு இப்போது இன்னோது ராமேஸ்வரத்தில் மூழ்கிக் கிடக்கும் ராமன் முத்தள்ளிக் கொட்டுகிறான். இடிப்பது தவறு என்னும் கோஷம் மத விஷமாக மனங்களில் நடப்பட்டுக் கொண்டே இருக்கின்றன.

பார்ப்பனீயர்களின் சூழ்ச்சியைப் புரிந்து கொள்ளாத மக்களும் ராமனுக்கு வக்காலத்து வாங்குவதாக நினைத்துக் கொண்டு பாசிசக் கொள்கைக்கு பாய் விரிப்பது தான் பரிதாபம்.

தமிழகத்துக்கு எந்த நலனும் கிடைக்கக் கூடாது என்று காலம் காலமாய் நினைத்து செயலாற்றி வருகின்ற வடநாட்டவரின் எண்ணத்துக்குத் துணையாக தமிழனே வேட்டி உருவி நிற்பதை அவமானம் என்று சொல்லாமல் வேறென்ன என்று சொல்வது ?

சீதையை மீட்டபின் ராமன் சீதையிடம் கேட்கும் கேள்விகளைப் பார்த்தால் எந்த பெண்ணும் ராமனை வெறுக்க வேண்டும். ஆனால் நடப்பதோ ராமனைப் போல ஒரு புருஷன் வேண்டுமென்று வேண்டுதல்கள் ! திருமணம் செய்து கொண்டபின் புருஷன் சந்தேகப் படுகிறான், திட்டுகிறான், கோழையாய் இருக்கிறான், எரிக்கிறான், ஜாதி வெறியில் அலைகிறான் என்றெல்லாம் சொன்னால் இதெல்லாம் தானே ராமனின் குணாதிசயங்கள். அதைத்தானே நீ கேட்டாய் பெண்ணே என்று விளக்கம் சொல்ல பகுத்தறிவுப் பாசறையில் வந்த சிலரைத் தவிர யாரும் இல்லை இங்கே.

மாத்ரி சேவா டிரஸ்ட் மூலம் மோசடி செய்து பிழைப்பை ஓட்டும் வேதாந்தியை எதிர்த்துக் குரல் கொடுக்கக் கூட தயக்கம் இங்கே ! முன்னாள் வருமான வரித்துறை ஆணையர் விஷ்வ பந்து குப்தா ” ராமஜன்ம பூமி டிரஸ்ட், விஷ்வ இந்து பரிஷத் இரண்டுமே போலியான பத்து டிரஸ்ட்கள் மூலம் ஆண்டுக்கு பதினையாயிரம் கோடி ரூபாய் வசூலித்து மதவெறி பரப்பி மாஃபியாக்கள் போல செயல்படுகின்றனர்” என்று சொல்லியிருப்பது கவனிக்கத் தக்கது.

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அத்வானியோடு சேர்ந்து குற்றம் சாட்டப்பட்ட பதினொன்று நபர்களில் ஒருவரான வேதாந்தியைத் தெரியாது என்று பாசக சொல்லியிருப்பது வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் முயற்சி என்பதைத் தவிர வேறு ஏதும் நினைப்பதற்கில்லை.

அயோத்தியில் கிமு 700 ஆம் ஆண்டிலிருந்து மனிதர்கள் வாழ்ந்த தடம் இருப்பதை ராமன் வாழ்ந்த அடையாளங்களாகச் சித்தரித்து இடித்தவர்கள் சொன்ன நியாயம், 17.5 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பே உண்டான ராமேஸ்வரம் மணல் திட்டை ராமன் போட்ட முட்டை என்று சொல்வது பகுத்தறிவாளர்களை மீண்டும் ஒரு முறை சிரிக்க வைக்கிறது.

ஐந்து நாளில் எண்ணூறு மைல் தூரத்துக்கு ராமன் பாலம் போட்டதாக “வால்”மீகி சொன்னார். அடே மடையா.. இலங்கைக்கு இருக்கும் தூரமே முப்பது மைல் தானேடா ? அப்போ எதுக்கு ராமன் எண்ணூறு மைல் தூரத்துக்கு பாலம் போட்டான் என்று யாரும் கேள்வி கேட்கவில்லை. அட.. அப்படியா சங்கதி என்று மீண்டும் ஒருமுறை நமக்கெல்லாம் சிரிக்க வாய்ப்பு வழங்கியதைத் தவிர வேறேதும் நிகழவில்லை இதில்.

ராமன் போட்ட கல் மிதந்ததாம். இப்போ மூழ்கிக் கிடக்கும் கல் ராமன் போட்டதுன்னு எப்படிப்பா சொல்றீங்க ? அப்போ ராமனோட பவர் போயிடுச்சான்னு கேக்காதீங்க. ஒருவேளை கேட்டா அந்த பாலத்தை ராமனே உடச்சுட்டான்னு சொல்லுவாங்க. ராமனே உடச்ச பாலத்தை நாம உடைக்கக் கூடாதான்னு மறுபடியும் கேட்டு பார்ப்பனர்களை டென்ஷன் ஏத்தாதீங்க.

மத உணர்வுகளை புண்படுத்தி விட்டதாகக் கூறி கருணாதியைக் கொல்லச் சொல்கிறார் காவிக் கசடு. அப்போ பாபர் மசூதி இடிப்புக்காக மத உணர்வுகள் புண்படவில்லையா ? அப்போதும் இவர்கள் இதே பரிசை அறிவித்திருக்க வேண்டியது தானே ? அத்வானிக்கு எதிராகவோ, அல்லது அவரது அடி வருடிகளுக்கு எதிராகவோ ? ஏன் செய்யவில்லை ?

ராமேஸ்வரத்திற்கும் இலங்கைக்கும் தலைமன்னாருக்கும் இடையே உள்ள ஆடம்ஸ் பிரிட்ஜ் பகுதியில் கப்பல் போக்குவரத்துக்குத் தடையாக உள்ள மணல் மேடுகள், பாறைகள் அகற்றி

ஆழப்படுத்தி கால்வாய் அமைப்பது சேது சமுத்திரத் திட்டத்தின் தலையாய நோக்கம். என்று தெள்ளத் தெளிவாக தேர்தல் அறிக்கை பக்கம் எண்பத்து மூன்று, எண்பத்து நான்கில் குறிப்பிட்டு விட்டு ஜெ வும் கைத்தடிகளும் பார்ப்பனீயர்களின் மாவடு பக்கம் மடி சாய்த்திருப்பது சிரித்துச் சிரித்து மாளாது !

“ராமன் தெய்வமாக வழிபட தகுதி இல்லாதவன். அவன் சீதாவை மட்டும் சந்தேகப் படவில்லை. இலட்சுமணன், பரதன், அனுமன் என எல்லோரையும் சந்தேகப் படுமளவுக்கு சராசரி மனிதன்” இதைச் சொன்னது கலைஞர் அல்ல. ரைட் ஹானரபிள் வி.எஸ் சீனிவாச சாஸ்திரிகள் !!!

தீக்குளித்த சீதையை காட்டுக்குத் துரத்திய மனித நேயமற்றவன், தன் மகன்களையும் காட்டுக்குத் துரத்திய பொறுப்பற்ற தந்தை ராமன். இவன் பொண்ணு கட்டியதே தப்பு, அப்புறம் பாலம் கட்டினா என்ன வெட்டினா என்ன. சீதையை காப்பாற்றவா பாலம் போட்டான் ராமன் ? இல்லையப்பா தென்நாட்டை அழிக்க. இலங்கையை எரிக்க.

தடாகை மகனை இலட்சுமணன் கொல்ல, ராமன் சொல்கிறான் “சூத்திரனைத் தானே கொன்றாய். அதனால் பாவமில்லை” !!. தவம் செய்யும் சம்புகன் ஒரு சூத்திரன் என்பதற்காய் அவனை கண்ட துண்டமாய் வெட்டி விடுகிறான். சூத்திரனுக்கு தவம் செய்யும் உரிமை இல்லையாம்.

உண்மையைச் சொல்வதெனில் கலைஞர் யாரையும் புண்படுத்தவில்லை. வால் மீகியும், ராமனும் சேர்ந்து தான் புண்படுத்தியிருக்கின்றனர்.

பெரியார் ராமன் ஒரு பேடி என்கிறார். அதற்கு அவர் சொல்லும் காரணம், ராமன் வாலியை மறைந்திருந்து கொன்றான், தாடகையை மறைந்திருதே கொன்றான், ராவணனையும் நேருக்கு நேராய் நின்று கொல்லவில்லை. அட.. ஆமா என்று நினைக்கத் தோன்றுகிறது அல்லவா.

இராமாயணம் ஆரியர்களை உயர்வாகவும், திராவிடர்களை அரக்கர்களாகவும் பாவிக்கும் ஒரு காவியம். ஆரியர்களின் அடக்குமுறைக்கு திராவிடர்கள் பலியான துயர கதை என்பதை பல்வேறு அறிஞர்கள், ஆராய்ச்சியாளர்கள் விளக்கிக் கூறியிருக்கின்றனர். இது ஒன்றும் புதிதல்ல.  

Advertisements

~ by nermai மேல் ஒக்ரோபர் 5, 2007.

6 பதில்கள் to “ராமன் : உண்மையை உரக்கச் சொல்”

  1. சரியாக சொல்லி இருக்கிரீர்கள் அப்படியே கொஞ்ஜம் ரிக் வேதத்தையும் படித்து பாருங்கள் பொய்யும் புரட்டும் வெளிப்படும் நான் கொஞ்ஜம்தூரம் படித்தேன் அதர்க்குமேல் படிக்க நெட்டில் கிடைக்கவில்லை இந்த உலகத்தையும் சூரியன் சந்திரன் நட்சத்திரம் எல்லாவற்றையும் படைத்த கடவுலை இந்தியாவில் இருப்பவனுக்கு மட்டும் தான் தெரியும் மற்றவனுக்கெல்லாம் ( மற்ற நாட்டில் இருப்பவருக்கெல்லாம் தெரியாமல் போனது என்ன) முடிந்தா இந்த ப்லாக் கூட வரமுடியாம பன்னலாமே கேவலம் ஒரு ரவுட்டர் ப்லாக் பன்னுது கடவுலால முடியாதா

  2. i cann’t accept it,what u told…

  3. Ramar is god not a human being moreover he doen’t suspect seetha… u just go and read the ramayanam well… especially about sathiyavathi character then u will find the truth…

  4. நாய்ங்களா, வெள்ளைக்காரன் அவன் பெய்ஞ்சத எடுதுட்டு வந்து மருந்துன்னு சொன்ன அத அப்படியே வாங்கி குடிக்கிற நீங்க ரமண பட்டி பேசுறதுக்கு தகுதியே இல்லை…பினந்தின்னிகளே, கலைஞரு, பெரியார்னு சொளுரின்களே, அந்த நாய்ங்க மட்டும் பேடிங்க இல்லையா? ஒருத்தவன் இன்னன்னா அங்க ஒரு இனமே அழிந்திகிட்டு இருந்தப்ப கை தட்டி சிரித்தவன், இன்னொருத்தன், கட்டையில போற வயசுல அவனுக்கு குமரி கேக்குதா?
    டேய், முண்டம், எப்படி எப்படி இலங்கைக்கு இருக்கும் தூரமே முப்பது மைல் தானா? ஏன்டா, டேய், வெள்ளைக்காரன், ஆரம்பத்துல எல்லா கண்டமும் ஒண்ணா ஒட்டியிருந்துதுன்ன சொன்னா, நீ நம்புவ, ஆனா துரம இருந்துதுன்னு சொன்னா நீ நம்ப மாட்டிய? வெட்டிடுவேன்!!!

  5. i will kill you.rama was a god.rama was born for hounest.you dont be idiot and you’re
    buster

  6. dey unakku enna theriyum ramarai bathi.nee oru thayoli.kenapundai.he was an hounarable man.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: