கபாலீஸ்வரன் கபாலமும், பார்ப்பனர் சூழ்ச்சியும்

சில நாட்களுக்கு முன் கபாலீஸ்வரர் கோயிலில் இடி விழுந்தது. என்னடா இது கபாலீஸ்வரரின் கபாலத்துக்கே சோதனை வந்து விட்டதே என்று நானும் கொஞ்சம் வருத்தப்பட்டேன். இருந்தாலும் எனக்குத் தெரியும் தன்னுடைய தலையைப் பாதுகாத்துக் கொள்ள கடவுளர்களால் முடிவதில்லை என்று.

இல்லையேல் இத்தனை சிலைத் திருட்டு நடக்குமா, சிலை உடைப்பு நடக்குமா, போலிச் சாமியார்களின் பாதங்களில் கடவுளர்கள் கிடக்க வேண்டிய சூழல் வருமா ?

கபாலீஸ்வரரின் தலையில் இடி விழுந்த சமாச்சாரத்தை அறிந்த பகுத்தறிவாளர்களுக்குத் தெரிந்திருக்கும் இடி, மின்னலுக்கு கபாலீஸ்வரரும் ஒன்று தான் காசி மேடு கபாலியும் ஒன்று தான் என்பது. ஆனால் பூசாரிகள் தான் கொஞ்சம் குழம்பிப் போனார்கள்.

ஊடகங்களும் இதை ஏதோ நிகழக்கூடாதது நிகழ்ந்து விட்டது போல கொட்டை எழுத்தில் போட்டு கட்டம் போட்டு பூஜை செய்தனர்.

இந்தக் களேபரங்களில் திகைத்துப் போனவர்கள் கடவுளை வைத்து பிரிவினையும் தொழிலும் செய்து வரும் பார்ப்பனர்கள் தான். இவர்கள் தான், ஐயோ நம்ம வருமானம் போச்சே, இந்த பாழாப்போன கபாலீஸ்வரர் இடி விழுந்தப்போ கொஞ்சம் ஒதுங்கி நின்னிருக்கக் கூடாதா கணக்காய் அங்கலாய்த்தனர்.

நம்ம பார்ப்பனக் கூட்டத்துக்கு தான் ஏழாவது அறிவு வேலை செய்யுமே. அதாங்க, அடுத்தவனை ஏமாற்றும் அறிவு. உடனே அறிக்கை வெளியிட்டார்கள். எப்படி தெரியுமா ?

லோகத்துக்கு வர இருந்த ஆபத்தை பகவான் தன்னோட தலையிலே வாங்கிங்டான். அதனாலே எல்லோரும் பூஜை கர்மம், புனஸ்காரம் ஏதேதோ பண்ணுங்கோ, பகவானுடைய கோபம் தீரட்டும் ன்னு அறிக்கை வெளியிட்டார்கள்.

வெளியிட்ட பார்ப்பனர்கள் மாமியார்களுடன் உட்கார்ந்து மாவடு சப்பிக் கொண்டிருக்கையில், இதை வாசித்த பக்த கோடிகளாகிய வெவரம் கெட்டவர்கள். ஐயோ பகவானுக்கு ஏதாச்சும் பண்ணுங்கோ, அவர் சாந்தியாகட்டும் கணக்கா பரிகாரங்களில் இறங்கிவிட்டார்கள்.

பார்ப்பனர்களுக்கு இப்போ ஒரு மாவடுவில் இரண்டு மாங்கா !

அதுக்கப்புறம் என்னடான்னா, குருவாயூர் கோயிலில் யானை மேலிருந்த கடவுள் கீழே விழுந்து எலும்பு முறிவாம். காரணம் என்னன்னா ? திடீர்ன்னு யானைக்கு மதம் புடிச்சிச்சாம். அடங்கொய்யா யானைமேல கடவுள் இருந்தாலும் யானையை கண்ட்ரோல் பண்ண முடியாதா ? கடவுள் கீழே விழுந்து இடுப்பு எலும்பு முறிஞ்சு போய் ரொம்ப அவஸ்தைப் படறாராம்.

இப்படி கடவுளே கஷ்டப்பட்டிட்டு இருக்காரேன்னு ரொம்ப கவலையா பேப்பர் படிச்சா, இரண்டு ஆட்டை பலியிட்டாங்களாம், டிரெயினோ, பிளேனோ நல்லா ஓடட்டும்ன்னோ என்னவோ.

அட பதர்களா ன்னு விவேக் பாணில சொல்லிட்டு சிரிக்கிறதைத் தவிர வேறேதும் எனக்கு தோணலீங்க.

Advertisements

~ by nermai மேல் செப்ரெம்பர் 23, 2007.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

 
%d bloggers like this: