மிரட்டல் பின்னூட்டமிடும் பயந்தாங்கொள்ளி பார்ப்பனர்கள்.

 

சமீப காலமான சில பார்ப்பனர்களிடமிருந்து எனக்கு மிரட்டல் பின்னூட்டங்கள் வந்து கொண்டே இருக்கின்றன. எனது வீட்டில் அடுத்தவன் எறியும் கழிவுகள் சேரவேண்டாம் என்பதனால் அதை நான் அப்புரூவ் செய்வதில்லை.

நேர்மை வலைப்பூவை நான் ஆரம்பித்தது சிவாஜி போன்ற திரைப்படங்களுக்கு ஆரத்தி எடுக்கவோ அல்லது அரசியல் சார்பாய் யாரையும் சொறிந்து விடுவதோ அல்ல.

பெரியாரின் கொள்கைகளை வணிகத்துக்காகப் பயன்படுத்தும் கீழ்த்தரமான பெரியார் பக்தனும் அல்ல. நரம்புகளிலும், சுவாசத்திலும் அவற்றை ஓட விட்டிருப்பவன்.

பார்ப்பனர்கள் செய்யும் பொய் பிரச்சாரங்களை ஆதாரத்துடன் பல முறை எனது வலைப்பூவில் நான் விளக்கியிருந்தேன். இப்போதும் செய்கிறேன். இனியும் செய்வேன்.

இடஒதுக்கீடானாலும், ராமர் பாலமானாலும் உண்மை நிலவரம் என்ன என்பதையே நான் சொல்லி வந்திருக்கிறேன். பார்ப்பனர்களின் பல பொய் புள்ளி விவரங்களை வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறேன்.

நான் பார்ப்பனர்களின் எதிரி அல்ல. பார்ப்பனீய சிந்தனைகளின் எதிரி. பெரியார் சிந்தனை கொண்டிருக்கும் பார்ப்பனீயன் இருந்தால் அவனை மதிப்பேன். பார்ப்பனீய சிந்தனையை பெரியார் பக்தன் கொண்டிருந்தாலும் அவனை வெறுப்பேன். இது தான் எனது நிலை.

இதெல்லாம் பிடிக்காமல் தான் நாயே, பேயே என்றெல்லாம் அழைத்து எனக்கு பல பின்னூட்டங்கள் வந்து கொண்டிருக்கின்றன. அவற்றை நான் நாகரீகம் கருதி வெளியிடவில்லை. ஆனால் அவற்றை அனுப்புவது யார் என்பதை எனது பல்லாண்டு கால கணிணி பரிச்சயம் மூலம் கண்டுபிடிப்பேன்.

இதன் மூலம் பல பொய் முகமூடிகளை கழற்றிப் பார்க்கும் ஆசை எனக்கு வந்திருக்கிறது.

பார்ப்பனீயர்களுக்கு ஒன்று மட்டும் சொல்லிக் கொள்ள ஆசைப்படுகிறேன். உங்கள் கட்டுக் கதைகளை நம்பி அழிந்து போன காலமெல்லாம் போய் விட்டது. இப்போது பார்ப்பனீய சிந்தனைகளை ஒரு நகைச்சுவை போல தான் சமுதாயமே பார்க்கிறது.

அந்த அசிங்கமான மனோபாவத்திலிருந்து வெளியே வாருங்கள். தொடர்ந்து நீங்கள் என்மீது சேறு வீசினால் உங்களிடம் இருப்பது வெறும் சேறு மட்டுமே என்று கருதிக் கொள்கிறேன்.

உங்களுக்கு நன்றி. நான் சரியான பாதையில் தான் செல்கிறேன் என்பதை உங்கள் பின்னூட்டங்கள் சொல்லித் தருகின்றன.

என் பணி தொடரும் என்பதை மட்டும் உங்களிடம் சொல்லிக் கொள்கிறேன்.

Advertisements

~ by nermai மேல் ஜூலை 6, 2007.

4 பதில்கள் to “மிரட்டல் பின்னூட்டமிடும் பயந்தாங்கொள்ளி பார்ப்பனர்கள்.”

 1. //நான் பார்ப்பனர்களின் எதிரி அல்ல. பார்ப்பனீய சிந்தனைகளின் எதிரி. பெரியார் சிந்தனை கொண்டிருக்கும் பார்ப்பனீயன் இருந்தால் அவனை மதிப்பேன். //

  :-)))

  பார்ப்பனீயச் சிந்தனை/அடையாளம் உள்ளவர்கள்தான் பார்ப்பனர்கள்.
  பெரியார் சிந்தனை கொண்டிருக்கும் பார்ப்பனர்கள் இருக்க முடியாது. பெரியாரின் சிந்தனைகளை ஏற்கும் போதே பார்ப்பனிய சிந்தனைகள்/அடையாளங்கள் இல்லாமல் போகும்.

  பார்ப்பனீயம் சிந்தனைகள்/பழக்கங்கள் ஒருவருக்கு பிறப்பால் திணிக்கப்படுகிறது. அவர்கள் வளர்ந்த பின்னால் தான் பின் பற்றியது தவறு என்று அறியும் பட்சத்தில் அதனை விட்டுவிடலாம்.

  பெரியார் சிந்தனை கொண்டிருக்கும் பார்ப்பனீயன் இருந்தால்…என்பது ஜெயலலிதா பக்தியுள்ள கருணாநிதி விசுவாசிகள் இருந்தால்../b> என்பது போல் உள்ளது .. :-)))

 2. **********************************************************
  பெரியார் சிந்தனை கொண்டிருக்கும் பார்ப்பனீயன் இருந்தால்…என்பது ஜெயலலிதா பக்தியுள்ள கருணாநிதி விசுவாசிகள் இருந்தால்.. என்பது போல் உள்ளது .. :-)))
  **********************************************************

  அப்படி சொல்ல இயலாது.

  பாரதி தன்னுடைய கவிதைகளில் மகாபாரதம் ஒரு கற்பனைக் கதை என்று சொன்னவன்.
  பெண் விடுதலைக்காக குரல் கொடுத்தவன்.

  அவனும் பார்ப்பான் தானே. . . .?

 3. உங்கள் பணி தொடரட்டும்.

 4. என்ன ஆச்சு ? கொஞ்ச நாளா ஆளையே காணோம் ? மிரட்டல் அதிகமாகி வீட்டுக்கு ஆட்டோ வந்துச்சா ?

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

 
%d bloggers like this: