மென்பொருள் துறையில் கொத்தடிமை தனம்!!!

இன்று ஐ.டி தொழில்நுட்பத்துறை மற்ற துறைகளை விட வேலை வாய்ப்பு தருவதில் முன்னனியில் நிற்கிறது. இத்துறை தரும் சம்பளமோ மற்ற துறைகளை விட இரண்டு மூன்று மடங்கு அதிகமானது. இந்தப் பின்னணியில் இந்தத் துறையில் நடக்கும் ஒரு கொடுமை என்னவென்றால் அங்கு வேலை பார்ப்பவரை கொத்தடிமைகளை போல நடத்துவது. இன்று ஐ.டி தொழில்நுட்பத்துறையில் வேலை பார்ப்பவர்களிடம் பெரும்பான்மையான நிறுவனங்கள் ஏதாவது பிணையை ( Bond ) வாங்கி கொள்கிறார்கள். உண்மையில் கூடுதல் சம்பளம் கிடைக்க இவர்கள் இழப்பது மனநிம்மதி, கலாச்சாரம், உறவுகள், உடல் ஆரோக்கியம் என நீளமான பட்டியலைத் தரலாம்.

ஐந்திலக்க சம்பளம் மற்றும் சுகமான(!!??) வாழ்க்கை இவற்றின் காரணமாக என்ன எது என்று யோசிக்காமல் பிணையில் சிக்கும் தகவல் தொழில்நுட்பத் தொழிலாளர்களின் உரிமைகளுக்கான குரல் கொடுக்க வேண்டும் என்று எந்த அய்.டி. தொழிலாளர்களும் நினைப்பது இல்லை என்பது மிகவும் வேதனையானது. இதில் மேலும் கொடுமை என்னவென்றால் இவர்கள் பயிறச்சி கொடுக்காமலே பயிற்சி கொடுத்ததாக பிணை வாங்கி கொள்கிறார்கள். மேலும் வெளிநாடு சென்று வேலையை முடிப்பதற்கும் பயிற்சி கொடுத்ததாக பிணை வாங்கிக் கொள்கிறார்கள்.

இந்தப் பிணைகள் எல்லாம் சட்டப்பூர்வமானதுதானா என்பது குறித்த சந்தேகம் கணினி மென்பொறியாளர்களுக்கு இருந்தாலும் அவர்கள் பெரும்பாலும் வழக்கறிஞர்களைச் சந்திப்பது இல்லை. பணி விடுவிப்புக் கடிதம் ( ரிலீவிங் லெட்டர் ) போன்ற விஷயங்களிலும், புது கம்பெனியின் பின்புல தகவல் சரிபார்த்தலிலும் வேட்டு வைத்து விடுவார்கள் என்னும் கவலையில் அமைதியாகவே இருந்து விடுகிறார்கள். இதில் இருந்து எப்போது தான் விடுதலை?

Advertisements

~ by nermai மேல் மே 2, 2007.

9 பதில்கள் to “மென்பொருள் துறையில் கொத்தடிமை தனம்!!!”

 1. நீங்கள் சொல்வது சரிதான் ஆனால் இங்கே நிறைய பேர் வேலையில்லாமல் கஷ்டபடுவதை விட கிடைத்த வேலையே போதும் என்பது போல் யோசிக்கிறார்கள்

  இப்போது சில அரசு நிறுவனங்களும் நீங்கள் சொன்னது போல பிணை கேக்கிறார்கள் (குறைந்தப் பட்சம் 3 வருடங்கள்)

  எது சரி என்பதை காலம் தான் நிர்ணியக்க வேண்டும்

 2. வயத்திரிச்சல் .

 3. I beleive intha bond ellam india la sellaathu.
  you might hear about TCS case.
  thavira when you look for the job don’t just consider the salary they offer consider the workculture also.
  namma kitta matter iruntha evanum ethuvum panna mudiyaathu

 4. உண்மை உண்மை உண்மை !!! இதனால் பாதிக்கப் பட்ட பல பேரை நேரடியாகவே பார்த்திருக்கிறேன் 😦

 5. Basha, It is valid in India. Even though no training is given it is the responsibility of us to prove that we were not trained. There lies the problem.

 6. இதில் பாதிக்கபட்டவன் நான்.. இந்த கொடுமைக்குமுற்றுபுள்ளி வைபது யார் ??? இதில் பதிக்கப்பட்டது என்னுடய ஊடல்னலமும் தான் …….

 7. நேரடியாக பாதிக்க பட்டேன். இதில் இருந்து மீழ வழி இருந்தால் கூறுங்களேன்

 8. இந்தியாவில் இது ஒரு பிரச்சனை. ஏன் என்றால் தனக்கு எவ்வித பயிற்சியும் நிறுவனம் வழங்கவில்லை என்று நீங்கள் நிருபிக்கவேண்டும் நீதிமன்றத்தில்..இது நான் கேள்விப்பட்டது..நீங்கள் ஒரு நல்ல வழக்கறிஞசரின் சேவையை பெறலாம்..

 9. ஏன் இந்த வயத்தெரிச்சல்???

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

 
%d bloggers like this: