அரசின் பாரபட்சம் அம்பலம்!

அமெரிக்காவில் சுட்டுக் கொல்லப்பட்ட இந்தியப் பேராசிரியரின் இறுதிச் சடங்குகளில் கலந்து கொள்ள இந்திய அரசு பேராசிரியர் குடும்பத்துக்கு ஒரு மணி நேரத்திலேயே பயணத்துக்குரிய உதவிகளைச் செய்து சிலிர்க்க வைத்திருக்கிறது.

மனித நேயம் கொண்ட அனைவருமே இதைப் பாராட்ட வேண்டும். என் சார்பாகவும் இந்திய அரசுக்கு மனமார்ந்த நன்றிகளை உரித்தாக்குகிறேன்.

ஒரு நிமிடம்…

இதே அக்கறை இதே வேகம் இந்திய நாட்டில் வாழும் அனைத்து மக்களுக்கும் கிடைக்கிறதா ? ஏன் வெளிநாட்டில் முப்பது ஆண்டுகளாக வாழும் இந்தியர் ஒருவருக்காக அலறியடிக்கும் இந்திய அரசு இலங்கையில் பதறி ஓடும் தமிழ் இரத்தங்களை அலட்சியம் செய்கிறது ?

வெளிநாடுகளில் தீவிரவாதிகளால் கடத்திச் செல்லப்படும் இந்திய அப்பாவிகளுக்கு உதவித் தொகையும் நான்கு வரி இரங்கல் செய்தியும் அனுப்புவதுடன் அடங்கி விடுகிறது ?

வெளி நாடுகளில் (வளைகுடா நாடுகள், மலேஷியா, சிங்கப்பூர் உட்பட ) வாழ்க்கைக்கு வழியில்லாமல் சென்று, ஏஜெண்ட்களால் ஏமாற்றப்பட்டு சிறையில் வாடும் பல நூற்றுக் கணக்கான அப்பாவிகளைக் கண்டு கொள்ளாமல் இருக்கிறது ?

தமிழக மீனவர்களை அநியாயமாகச் சுட்டுக் கொன்று வெறியாட்டம் ஆடும் இலங்கை அரசின் மீது சாமரம் வீசுகிறது ? இது பல ஆண்டுகளாக நீடிக்கிறது..

இது எந்த ஊர் நியாயமுங்கோ ? அமெரிக்காவில் உலகத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இறந்து போன ஒரு பணக்காரருக்கு மட்டுமே இந்த சிறப்பு மரியாதை வழங்கப்படுமெனில் இந்திய அரசு அதற்காய் கொஞ்சம் வெட்கப்படட்டும்.

இறந்து போன பேராசிரியரின் குடும்பத்துக்கு என் நிஜமான அஞ்சலிகளும், வருத்தமும். ஆனால் அதை வைத்துக் கொண்டு அரசியல் செய்யவும், அமெரிக்க அரசின் நன்மதிப்பைப் பெறவும் சிங்கியடிக்கும் இந்திய தலைகள் மீது வெறுப்பும், வேதனையும்…

 Reposted this as I deleted this accidentally.

தவறுதலாக இப்பதிவை அழித்துவிட்டதால் மறுபதிவு செய்கிறேன்

Advertisements

~ by nermai மேல் ஏப்ரல் 23, 2007.

2 பதில்கள் to “அரசின் பாரபட்சம் அம்பலம்!”

  1. இது தொடர்பாக நான் படித்த இன்னொரு பதிவு http://photobala.blogspot.com/2007/04/blog-post_20.html#links

  2. சேவியர், மிக்க நன்றி..அது ஒரு அருமையான பதிவு..

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

 
%d bloggers like this: