வாழ்க்கையை சீரழிக்கு`அட்சய’ திருநாள்!

அட்சயத் திருதியை அன்று நகை வாங்கினால் வாழ்க்கை கொழிக்கும் என்ற மூடநம்பிக்கை தற்போது நம் தமிழ் நாட்டில் தலைவ்விரித்தாடுகிறது. கடந்த சில ஆண்டுகளில்தான் இந்த நாளில் ஆண்களும் பெண்களுமாக, எப்பாடு பட்டாவது ஒரு குண்டுமணி தங்கமாவது வாங்கிவிட வேண்டும் என்கிற தீர்மானத்துடன் நகைக் கடையை மொய்க்கிறார்கள்.

இதை விட கொடுமை என்ன வென்றால், கடன் வாங்கியாவது தங்கம் வாங்கிவிட வேண்டும் என்னும் போக்கு. தங்கள் வியாபாரத்தை உயர்த்த நகைக்கடைக்காரர்கள் செய்யும் தந்திரம் இது என்பதை புரியாமல் பொது மக்களும் எப்படியாவது அன்றய தினம் தங்கம் வாங்கி பின் மிளா கடன்களில் மாட்டி கொள்கிறார்கள்.

முதலில் இது உழைத்து முன்னேற வேண்டிய மக்கள், தாங்கள் உழைக்காமலே செல்வச் செழிப்போடு வாழலாம் என்ற எண்ணத்தை வளர்க்கும். நகைக்கடைக்காரர்கள் செய்யும் தந்திரம் அட்சய திருதியையில் நகை வாங்கினால் போதும், தங்கமும் செல்வமும் குவியும் என்கிற மூடநம்பிக்கை மக்கள் மனதில் வளர்க்கும், நகைக்கடைக்காரர்கள் தங்கள் வியாபாரம் பெறுகி செல்வச் செழிப்போடு வாழ அப்பாவி மக்களை மூடநம்பிக்கை என்னும் புதை குழியில் தள்ளுவதை என்னவென்று கூறுவது?

அதிக வட்டிக்குக் கடன் வாங்கி அன்றைய தினத்தில், குறித்த நல்ல நேரத்தில், நகை வாங்கிவிட்டால் உழைக்காமலே செல்வச் செழிப்போடு வாழலாம் எனும் பேராசையை பயன்ப்படுத்தி ஒரே நாளில் நகைக்கடைக்காரகளின் லாபத்தைப் பன்மடங்காகப் பெருக்குவதை தடுக்க வேண்டிய அரசும் இதை காவல்துறையினரின் சிறப்பு பாதுகாப்பு ஏற்ப்பாடு செய்து மூடநம்பிக்கைக்கு ஊக்கமளிப்பதை தவிர்த்து தடுக்க ஏதாவது முயற்சி எடுத்தால் நல்லது.

பெரியார் நடந்த மண்ணில் இப்படி மூடநம்பிக்கை வளர்வது வருத்தமாக உள்ளது.

Advertisements

~ by nermai மேல் ஏப்ரல் 17, 2007.

5 பதில்கள் to “வாழ்க்கையை சீரழிக்கு`அட்சய’ திருநாள்!”

 1. நண்பரே, நான் யாரையுமே தங்கமோ, வைரமோ வாங்க வேண்டுமென்று சொல்லவேயில்லையே..மேலும் மற்றவர்களை வாங்காதே என்று சொல்லும் உரிமையும் யாருக்கும் இல்லை. எப்படி மற்ற நாட்களை போல இன்றும் நாம் ஏதாவது நல்ல காரியம் இன்று மட்டுமாவது செய்ய வேண்டும் என்று தான் சொல்லியுள்ளேன். இன்று செய்யும் நல்ல காரியங்கள் பல மடங்கு பெருகி நல்ல பலன்களை கொடுக்கட்டும் என்றும் தான் சொல்லியுள்ளேன். நீங்கள் தவறாக புரிந்து கொண்டுள்ளீர்கள்.இன்னொரு முறை படியுங்கள். எங்காவது நீங்கள் சொன்னது போலிருந்தால் நான் என் தவறை திருத்திக் கொள்கிறேன்.

 2. நான் கூறியது

  //தயவு செய்து இது போல மூடநம்பிக்கையை பரப்பாதீர். //

  தங்கம் வாங்க சொன்னீர் என்று கூறவில்லை.

  நன்றி..

 3. நல்ல பதிவு. இன்னும் இது குறித்து அதிக தகவல்கள் வெளியிட்டால் சிறப்பாக இருக்கும்.

 4. It is sort of Business Trick to make people to buy more on that day. There is a chance of more like this superstitious things.
  “keakravan keana payala iruntha
  keapaila ney vadiuthunum solluvaanga”

 5. This day is only for the benefit of the maarvadi in Tamil nadu. Every tamil born must understand this.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

 
%d bloggers like this: