About
வாழ்க்கையின் மீதான கரிசனையும், சக மனிதனின் மீதான அக்கறையும், மனித நேயம் மறுதலிக்கப்படுகையில் எழுகின்ற தார்மீகக் கோபமும், சமூகத்தின் பாதைகளின் சிறிதளவேனும் பகுத்தறிவு வெளிச்சத்தை விட்டுச்செல்ல வேண்டும் என்னும் தணியாத ஆர்வமுமே என்னுடைய நேர்மை வலைப்பதிவின் நோக்கம்.
இங்கே கேளிக்கைகளின் சுவாரஸ்யங்களோ, பொழுதுபோக்கின் அம்சங்களோ அகப்படாமல் போனால் கவலைப்படாதீர்கள். அதற்கென்று ஏராளம் வலைப்பதிவுகள் உள்ளன. உங்கள் விருப்பங்களை நிறைவேற்ற இயலாத சூழலில் எனது சிந்தனைகள் இருந்தால் மன்னியுங்கள்
என்னோடு கைகோர்த்து சமூகத்தினருக்கு சிறிதளவேனும் புரிதல் வெளிச்சத்தைப் பகிர விரும்புபவர்களை இந்தத் தளம் வரவேற்கிறது. உங்கள் கருத்துக்களைப் பின்னூட்டங்களாகப் பதிவு செய்யுங்கள்.
எந்த ஒரு சாதி, இன, மொழி அமைப்போடும் எனக்கு மோதல் இல்லை. எனில் இவற்றில் ஏதேனும் ஒன்று மனித மாண்புக்கும், இறையாண்மைக்கும் எதிராக எழுகையில் அதன் கருத்துக்களோடு மோதல்கள் எழுவதைத் தவிக்கவும் முடிவதில்லை.
வாருங்கள்… இணைந்து பயணிப்போம்

மறுமொழி இடுக