பார்பானுக்கும் அவஸ்தைகள் உண்டு
உரு நோக்குவான்
பஞ்ச கச்சம் இல்லையேல்
பெயர் கேட்குவான்.
பெயர் அலசுவான்
பெயர் வைத்துப் புரியவில்லையா
ஊர் கேட்பான்
தெருகேட்பான்
அப்படியும் தெரியலையா
ஆழமாய் நெற்றி நோக்குவான்.
நெற்றி நோக்குவான்
கோடில்லையேல்
கேடி இன்னும் நெருங்குவான்.
ஆங்கில உரையாடல் இடையே
“ஆத்து” உரையாடலை
மெதுவாய் விடுவான்
“நூல்” பிடித்து மற்றவர்
கரையேறி வருகிறாரா என கவனிப்பான்.
அதுவும் இல்லையா
அவஸ்தைப்படுவான்.
தோழன் போல
தோளில் கை வைத்து
தட்டிக் கொடுப்பது போல்
நூல்
தட்டுப்படுதா எனப் பார்ப்பான்.
உச்சிக் குடுமி இழந்து
நெற்றிக் கோடும் இழந்து
பஞ்ச கச்சம் இழந்து
ஆத்து பாஷையும் இழந்து
அடையாளம் இல்லாமல் தன் இனம்
அழிந்து போவதாய்
ஆத்துக் கூட்டத்திடம் அழுது புலம்புவான்
விஷத்தை அகத்தில் நிரப்பிய
பார்ப்பன பார்த்தசாரதி.


வாழ்த்துக்கள்., தொடர்ந்து எழுதவும்.